200 கிராம் பாசிப்பருப்பிற்கு 100 கிராம் வெல்லம் சரியாக இருக்கும். கூடவே 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் வடிகட்டிய வெல்லத் தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கொள்ளலாம்.
இதனோடு நான்கு தேக்கரண்டி நெய், 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கிளறி கொண்டே இருங்கள். முதலில் அல்வா பதத்திற்கு வரும். அதன் பிறகு நன்றாக கெட்டியாகி பர்பி பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். பர்பி பதத்திற்கு வந்த பின் ஒரு தேக்கரண்டி நெய் தடவிய பாத்திரத்தில் இதனை கொட்டி, ஆறியதும் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளலாம்.