* வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மீண்டும் கொதிக்க விடவும். பாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்கவும். சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். இது தான் சரியான பதம்.
* ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பவும். ஆறியதும் துண்டுகள் போடுங்கள்.