கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்கா முட்டை. இந்த படத்தின் கதை பீட்சா என்ற உணவுப்பொருளை மையமாக வைத்து நடைபெறும். பிரபல நடிகரை வைத்து விளம்பரம் செய்ததால், பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் அந்த பீட்சா உண்பதற்கு சிறப்பாக இருக்கும் என இரண்டு சிறுவர்கள் நினைத்து அதனை வாங்கி உண்ண சிறிது சிறிதாக பணம் சேர்பார்கள்.
அதன் பின்னர் அந்த பீட்சா கடைக்குள் செல்ல வேண்டுமானால் புதிய ஆடை அணிந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும் சிறுவர்கள் அதற்கான முயற்சியில் இறங்குவார்கள். இறுதியில் பல தடங்கள், பிரச்சனைகளுக்கு பின்னர் பீட்சாவை உண்பார்கள் சிறுவர்கள்.
பீட்சாவை உண்ணும் அந்த சிறுவர்களில் ஒருவன் சொல்லுவான் என்னடா இந்த பீட்சா இப்படி இருக்கு, அதுக்கு பாட்டி சுட்ட தோசையே நல்லா இருக்குமே என்பான். இன்றைய காலகட்டதில் நாம்மில் பலரும் இந்த மனநிலமையில் தான் இருக்கிறோம் நம் மண் சார்ந்த பல தின்பண்டங்களை மறந்துவிட்டு நாகரிகம் என்ற பெயரில் என்ன சாப்பிடுகிறோம் அது எப்படி தயாரிக்கப்படுகிறது, அதில் என்ன மூலப்பொருட்கள் இருக்கிறது என்பது தெரியாமலே அதற்கு அடிமை ஆகின்றனர்.