தீபாவளி லேகியம் செய்வது எவ்வாறு??

தேவையானவை:
 
ஓமவல்லி இலை - 10
துளசி இலை - 10
இஞ்சி - 1 துண்டு
லவங்கம் - 3
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 10
தேன் - சிறிதளவு

 
செய்முறை:
 
மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை விடவும். அரைத்த விழுது, பொடித்த வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆறவைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்