அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் பேக்கிங் பவுடர், வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பட்டைதூள் போட்டு மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
கலந்த கலவையை கேக் தட்டில் ஊற்றி ஓவனில் பேக் செய்யவும். ஓவனில் பேக் செய்யும் முன் முதலில் ஓவனை வெறுமனே சூடு செய்து, பிறகு கேக் தட்டில் மாவை ஊற்றி ஓவனில் வைத்த உடன் 160 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் என்ற அளவில் வைத்துவிடவும். இந்த கேக் தயாராக குறைந்தது 35 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். ஓவனை பொறுத்து நேரம் மாறுபடலாம்.