வெ‌ண்ணெ‌ய் பிஸ்கெட்

வியாழன், 21 அக்டோபர் 2010 (14:25 IST)
தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/4 தே‌க்கர‌ண்டி
அஸ்கா சர்க்கரைப் பொடி - 100 கிராம்
கார்ன்ப்ளேக்ஸ் - 25 கிராம்
வெண்ணெய் - 125 கிராம்

செய்முறை:

மைதாமாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

வெண்ணெயையும், சர்க்கரைப் பொடியையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

கரண்டிக் காம்பால் ஒரே திசையில் அடித்தால் சுலபமாக கலந்து கொள்ளும்.

இதில் மைதா மாவைக் கலந்து பிசையவும். ஆனால் அதிக நேரம் பிசைந்து விடக்கூடாது.

மிகவும் மிருதுவான ஒரு கலவையான இருக்க வேண்டும்.

கையை நீரில் நனைத்து மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.

உருண்டைகளை 1/4 இஞ்ச் கனத்திற்கு உள்ளங்கையில் வைத்துத் தட்டி, பொடி செய்த கார்ன்ப்ளேக்ஸில் மெதுவாக பிரட்டி எடுக்கவும்.

நெய் தடவிய டிரேயில், டிரேஸ் பேப்பரைப் போட்டு, பிஸ்கெட்டுகளை அடுக்கி, ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் 15 முதல் 20 நிமிடம் பேக் செய்யவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்