ரசகுல்லா தயாரிக்க இயந்திரம்!

வியாழன், 8 ஜனவரி 2009 (18:45 IST)
இந்தியாவில் வட மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள மக்களுக்கு ரசகுல்லா சாப்பிடாமல் இருக்க முடியாது. இவர்கள் ரசகுல்லாவை சாப்பிடுவதில் மட்டும் அல்ல, இதை நாவில் உமிழ்நீர் உற்பத்தியாகும் அளவுக்கு தாயரிப்பதிலும் வல்லவர்கள்.

வங்காள மக்களின் பாரம்பரிய இனிப்பான ரசகுல்லாவை தயாரிப்பதற்கு புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த ‌ஹ‌ிந்துஸ்தான் ஸ்வீட்ஸ் தானியங்கி முறையில் ரசகுல்லா தயாரிக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது.

இதன் தாயாரிப்பு முறை பற்றி ஹிந்துஸ்தான் ஸ்வீட்ஸ் இயக்குநர் ரபீந்திர குமார் பால் கூறுகையில், இந்த இயந்திரத்தில் மூலம் ரசகுல்லா மூன்று கட்டமாக தயாரிக்கப்படும். முதலில் பாலில் இருந்து வெண்ணை (சீஸ்) எடுக்கப்படும். இதில் இருந்து உருண்டை அல்லது நீளமாக தயாரித்து நேரடியாக வானலிக்கு செல்லும். இதன் அளவு, எண்ணிக்கையை மாற்றி அமைக்கும் வசதியும் உள்ளது.

இயந்திரத்தின் முதல் இரண்டு அமைப்புகளும் தயாரிக்கப்பட்டு விட்டது. மூன்றாவது அமைப்பு கராக்பூரில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகத்தின் தொழில் நுட்ப உதவியுடன் ஒரு வருடத்திற்குள் அமைக்கப்பட்டு விடும்.

ரசகுல்லா தாயாரிக்கும் இயந்திரத்தின் இரண்டாவது அமைப்பை கொரியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

தற்போது ஹிந்துஸ்தான் ஸ்வீட்ஸ் தினசரி 10 ஆயிரம் ரசகுல்லாவை தயாரித்து வருகிறது. இதை தானியங்கி இயந்திரம் மூலம் தயாரிக்கும் போது தினமும் இரண்டு லட்சம் ரசகுல்லா வரை தயாரிக்க முடியும் என்று ரபீந்திர குமார் பால் தெரிவித்தார்.

ரசகுல்லா தாயரிக்கு ரூ.25 கோடி முதலீட்டில், 50 ஆயிரம் சதுர அடி பரப்பளிவில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படும் என்று ரபீந்திர குமார் பால் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்