சோள ஹல்வா

வெள்ளி, 21 டிசம்பர் 2012 (13:46 IST)
சத்து மிக்க சோளத்தை பொதுவாக வேகவைத்து சாப்பிடும் வழக்கம் உள்ளது.
அந்த முறையை விடுத்து புதிய வழியில் சோளத்தை ஹல்வாவாக செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை

சோளம் - 3/4 கப
நெய் - 4 ஸ்பூன்
பால் - 1/2 கப
சக்கரை - 1 கப
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
பாதாம் , பிஸ்தா - சிறிது

செய்முறை

சோளத்தை வேகவைத்து தண்ணீரில்லாமல் அரைத்து கொள்ளவும்

வானலியில் நெய் விட்டு அரைத்த விழுதை நன்றாக வறுத்துக்கொள்ளவும்

இதில் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள் மற்றும் சக்கரையை சேர்க்கவும்

இந்த கலவையிளிருந்து நெய் பிரிந்து வரும் போது பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்