கிறிஸ்மஸ் ஸ்பெஷல் - Bakeless Pineapple cherry Cake

திங்கள், 23 டிசம்பர் 2013 (17:50 IST)
FILE
கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், அனைவரும் புத்தாடை, கேக், பரிசுகள் என பரபரப்பாக இருக்கின்றனர். கிறிஸ்மஸ் தினத்திற்கு சிலர் அவர்களது வீட்டில் கேக் செய்தாலும், பலருக்கு பிரியாணி செய்வது போல் வீட்டிலேயே கேக் செய்ய தெரியாது.

கேக் செய்வதற்கு நிறைய பயிற்சி தேவைப்படும் நிலையில், பலர் கேக்கை கடைகளில் இருந்து வாங்குவதே சிறந்தது என கருதுகின்றனர். ஆனால், இந்த கிறிஸ்மஸிற்கு நீங்கள் உங்கள் வீட்டிலேயே மிக எளிமையாக கேக் செய்யலாம்.

உங்கள் குழந்தைகள்கூட மிக சுலபமாக செய்து அசத்தலாம்.

தேவையானவை

கண்டென்ஸ்ட் மில்க் - 1 கப்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
பைன்னாபிள் - 1 கப் (துருவியது)
வெண்ணிலா வெஃபர் -20
செர்ரி - 1/2 கப்
கிரீம் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது - சிறிதளவு

FILE
செய்முறை

ஒரு பாத்திரத்தில், கண்டென்ஸ்ட் மில்க், பைன்னாபிள் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.

ஒரு அகலமான தட்டு போன்ற பாத்திரத்தில் முதலில் 5 வெண்ணிலா வெபர்களை வரிசையாக அடுக்கவும், அதன்மேல் தயாரித்த பைன்னாபிள் கலவையை தடவவும்.

பின்னர் மீண்டும் அதன்மேல் வெண்ணிலா வெஃபர்களை அடுக்கி கண்டென்ஸ்ட் மில்க், பைன்னாபிள் கலவையை பூசவும்.

இதே போல் தேவைகேற்ப அடுக்கியபின் அந்த கலவை மீது சிறிதளவு கிரீம் மற்றும் தேங்காய் துருவலை தூவி, செர்ரி வைத்து அலங்கரிக்கவும்.

இந்த பாத்திரத்தை அப்படியே பிரிட்ஜில் 8 மணி நேரத்திற்கு வைத்து பரிமாறினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்