பூசணி மிட்டாய்

புதன், 22 டிசம்பர் 2010 (18:17 IST)
தேவையானவை:

பூசணிக்காய் - 2 கிலோ
சர்க்கரை - 2 கிலோ
படிகாரம் - 40 கிராம்
ரோஸ் வாட்டர் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பூசணிக்காயை நீளமானத் துண்டுகளாக வெட்டி உள்ளிருக்கும் விதை நாறை அகற்றவும்.

பின்னர் தோல் சீவி சாப்பிடப் போதுமான அளவு மிட்டாய் வடிவத் துண்களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதில் படிகாரத்தை தூளாக்கி போடவும்.

பின்னர் அதில் பூசணித் துண்டுகளைப் போட்டு அடுப்பிலேற்றி வேக வைக்கவும்.

வெந்த பின்னர் பூசணித் துண்டுகளை தண்ணீர் விட்டு நன்கு கழுவவும்.

அதன்பின்னர் சர்க்கரைப் பாகு காய்ச்சி அதில் கழுவிய பூசணித் துண்டுகளைப் போடவும்.

பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து பாகு கெட்டியானதும் இறக்கி ரோஸ் வாட்டர் தெளிக்கவும்.

அவ்வளவுதான், குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான பூசணி மிட்டாய் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்