அத்திப்பழ பாசுந்தி

வியாழன், 17 ஜனவரி 2013 (18:37 IST)
அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை கொண்ட பழமாகும்.அத்திபழத்தை கொண்டு செய்யப்படும் அத்திபழ பாசுந்தி அலாதியான சுவை தரும்,செய்வதும் மிக சுலபம்.

தேவையானவை

பால் - 4 கப்
அத்திபழம் - 2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 கப்
சோளமாவு - 1 ஸ்பூன் (பாலில் கரைத்துகொள்ளவும்)
பால் கோவா - 1 கப்
சக்கரை - 1/2 கப்

செய்முறை

அத்திபழத்தை சிறு துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை காய்ச்சவும், பால் பொங்கியவுடன் மிதமான தணலில் பாலை கலக்கிகொண்டிருக்கவும்.

தொடர்ந்து கலக்கும்போதே, பாலில் ஒவ்வொரு துளியாக எலுமிச்சை சாறினை சேர்க்கவும். (மொத்தமாக சேர்த்தால் பால் வீணாகிவிடும்)

இதோடு சோள மாவு (பாலில் கரைத்தது), பால் கோவா, சக்கரை ஆகியவற்றை சேர்க்கவும்.

பாலுடன் அனைத்து பொருட்களும் நன்றாக கலந்தபின், நறுக்கிய அத்திபழங்களை சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

இதை குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்து, அதில் நறுக்கிய அத்திப்பழ துண்டுகளை போட்டு சில்லென்று பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்