மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
இந்த பட்ஜெட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு செல்லப்படும் என்று நம்பிகை தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.
வறுமை கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு காப்பீட்டு திட்டம் அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
இந்த அறிவிப்புகளால் ஏழை எளிய மக்களுக்கு பெரிய பலன்கள் எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதிவியேற்றப் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பாஜக அரசின் முதல் பட்ஜெட்டில் (2014-15) தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
2015-16 ஆம் நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் "தனிநபர்களுக்கான வருமான வரிவிலக்கில் மாற்றம் இல்லை" என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டாவது வருமான வரியை செலுத்துபவர்களுக்கு சில சாதகமான அறிவிப்புகள் வெளியிட்ப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வருமான வரி விலக்கின் உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் இல்லை என்று இந்த ஆண்டும் அறிவித்துள்ளார் பாஜக அரசின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
இந்த அறிவிப்பு மாத சம்பளதில் பணிபுரிபவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் விலைவாசி உயர்ந்துள்ளது.
பல்வேறு பொருட்களின் மதிப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் 2 முறை தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டிலும் தனிநபர்களுக்கான வருமான வரிவிலக்கில் மாற்றம் இல்லை என்று அறிவித்திருப்பதால் மாத சம்பளம் வாங்குபவர்கன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதே சமயம், பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும்."
"மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் சுங்கம், கலால் வரியில் மாற்றம் கொண்டு வரப்படும்."
"நிறுவனங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்க திட்டம் கொண்டுவரப்படும்"
"ஸ்ட்டாட் - அப் நிறுவனங்களுக்கு மேட் வரி, 3 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படும்"
"அன்னிய நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு செய்யப்படும்" என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெறியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த பட்ஜெட் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் சாதகமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், மானியங்களை குறிப்பதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகள் குருவி தலையில் பனங்காயை வைப்பது என்று சொல்லப்படும் பழமொழிக்கு ஒப்பானதாக உள்ளது.
இந்த பொருளதாரா அய்வறிக்கையும், மத்திய பட்ஜெட்டும் ஏழை மக்களுக்கு சுமையை அதிகரிப்பதாகவும், வியாபாரிகளுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.
நமது நாட்டில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ஏரானமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில், மின்சாரத்திற்கு வழங்கப்பட்டுவரும் மானியத்தை குறைக்க பரிந்துரை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக உயர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருப்பது.
பொருளாதார ஆய்வறிக்கைக்கும், பட்ஜெட்டிற்கும் மிகப்பெரிய முரண்பாடு காணப்படுகின்றது.
எப்படியாயினும் ஏழைமக்கள் துன்பத்தை அனுபவிப்பதும், வியாபாரிகள் பயன் பெறுவதும் இந்த சந்தைப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத விதி என்பது குறிப்பிடத்தக்கது.