நிலவுக்கு சென்ற மனிதனால் இங்கு செல்ல முடியாதம்

புதன், 22 பிப்ரவரி 2017 (21:12 IST)
பூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்ற மனிதர்களால், இதுவரை இந்த இடத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை. அந்த பகுதிக்கு சென்றால் மரணம் தான் முடிவு என்பதால் யாரும் செல்லுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


 

 
சேலஞ்சர் டீப் என்ற பகுதி உலகிலே அதிகமான ஆழம் கொண்ட கடல் பகுதி. சராசரியாக கடலின் ஆழம் 4 கி.மீ. இருக்கும். ஆனால், இந்த பகுதியில் கிட்டத்தட்ட 11 கி.மீ. வரை இருக்குமாம்.
 
கடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடிவதில்லை. கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென்றால் இந்த அழுத்தம் 2 மடங்கு இருக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கு இருக்கும். 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கும் இருக்கும். 
 
இது நம்மை படுக்க வைத்து 50 சிமெண்ட் மூடைகளை மேலே அடுக்குவது போல் அழுத்தம் கொண்டது. இதுவே 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு இருக்கும். அப்படியானால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவிச் செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து இருப்பதால் எதையும் பார்க்க முடியாது. 

வெப்துனியாவைப் படிக்கவும்