கொழுந்துவிட்டு எரிந்த இனவெறி

பாரதி

சனி, 5 செப்டம்பர் 2015 (15:24 IST)
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த இனவெறியை நாம் செய்தியாக படித்திருப்போம். இனவெறி தாக்குதலுக்கு உள்ளான மக்களின் மனநிலையை எவ்வாறு இருக்கும் என்பதை நமது நாடி பிடித்து விளக்குகிறது இப்புகைப்படம். 


 
 
1964ல் அமெரிக்காவில் இனவெறி உச்சத்தில் இருந்து. நிலப்பிரபுக்கள்  ஏராளமான கருப்பினத்தவர்களை தங்கள் பண்ணைகளில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தினர். 
 
உரிய உணவு இல்லாமல் உடுக்க உடையும் அளிக்காமல் மறுக்கப்பட்ட சமூதாயத்தின் குரல் இன்று அறவே ஒழிக்கப்பட்டாலும், அதன் தாக்கம் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
 
அமெரிக்காவில் உள்ள விடுதி ஒன்றில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் இரு கருப்பினத்தவர்கள் குளித்துக் கொண்டிருக்கின்றனர். 

இதனைக் கண்ட ஓட்டல் முதலாளி எரியும் திராவகத்தை அவர்கள் மீது சிறிதும் ஈவு இரக்கம் ஊன்றி ஊற்றுகிறார். 
 
கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை குளிர்வித்துக் கொள்ள வந்தவர்களை கொடூர தீயில் தள்ளிவிட்டவர் தான் இந்த வெள்ளையர். 

புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் நம் மனதில் இருக்கும் கருப்பு பக்கங்களை  வெள்ளையாக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்