சுயபுத்தி இல்லனா இப்படித்தான் ஏடாகூடமா வாங்கவேண்டி இருக்கும்!

சுரேஷ் வெங்கடாசலம்

ஞாயிறு, 10 ஏப்ரல் 2016 (10:00 IST)
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு கதை அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. சுயபுத்தி இன்று அடுத்தவன் செய்வதை அப்படியே செய்ய முயன்றார் என்ன நிலை ஏற்படும் என்பதை நகைச்சுவை உணர்வுடன் கூறும் கதை.


 

 

 
ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
 
"என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" என்று கூறினார்.
 
இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். யாரும் எதுவும் பேசவில்லை. அமைதிகயாக இருந்தனர்.
 
பேச்சாளர் தொடர்ந்தார். "அந்த இன்னொருவருடைய மனைவி, என் தாய் தான் என்றார். கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.
 
இதை கேட்ட பார்வையாளர்களுள் ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்தார்.
 
வீட்டிற்குச் சென்ற அவர், இரவு உணவுவை சாப்பிட்ட பின்னர், தன் மனைவியிடம், "என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.
 
பின்னர் கண் விழித்து பார்த்த போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் மனைவி வீசி எறிந்த கொதித்த வெந்நீர் பட்ட கொப்புளங்களுடன்.
 
நீதி: அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்.
 
இந்த கதை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைல் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றது. இதை எழுதியர் பார் என்று தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்