இது தான் நல்ல குடும்ப பொண்ணுக்கு அர்த்தம்... பிரியாமணியை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் தமன்னா!

சனி, 1 ஜூலை 2023 (17:05 IST)
தமிழ் சினிமாவில், கண்களால் கைது செய் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் பிரியாமணி. இதையடுத்து அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக நிலை நிறுத்திக் கொண்ட பிரியாமணி, தேசிய விருது வரை சென்றார். 
 
ஆனால் அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி எனக் கிடைத்த வேடங்களில் நடித்தார். அப்படியும் வாய்ப்பு கிடைக்காததால் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இதையடுத்து மீண்டும் வெப் தொடர்களில் நடித்து ஆர்வம் காட்டி வருகிறார். 
 
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் தொடர் கவனம் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திருமணத்திற்கு பின்னர் முத்தக்காட்சியில் நடிக்க மறுப்பது குறித்து பேசியுள்ள அவர், 
 
நான் தற்போது நடிக்கும் காட்சிகளில் ஓவர் கிளாமர் காட்டாமல் குறிப்பாக முத்த காட்சிகளில் நடிக்கவே மாட்டேன். காரணம் நான் நடிக்கும் படங்களை எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் பார்ப்பார்கள். அவர்கள் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்க கூடாது. 
 
மேலும் இன்னொரு ஆண் உடன் கிஸ் செய்ய எனக்கு விருப்பமில்லை, எனது கணவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும்" என பிரியாமணி கூறி இருக்கிறார். இதை கேட்டு பிரியாமணியை பாராட்டியுள்ள ரசிகர்கள் தமன்னா கேட்டு கத்துக்கோமாக என அட்வைஸ் கொடுத்துள்ளார்கள். தமன்னா நடிப்பில் தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடர் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்