படத்தின் வெற்றியை ரசிகர்களே தீர்மானிக்கிறார்கள் - நடிகர் பரத் பேட்டி
வியாழன், 16 பிப்ரவரி 2017 (11:11 IST)
பரத் நடித்திருக்கும் கடுகு விரைவில் வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள இன்னொரு படம், என்னோடு விளையாடு. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு பரத் பதிலளித்தார்.
என்னோடு விளையாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள என்ன காரணம்?
இதன் கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத்திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை.
இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்ன?
இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
படம் வெற்றி பெறும் என்று நம்புகிறீர்களா?
ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். இந்த படம் வெற்றி பெறும்.
கதிருடன் இணைந்து நடித்திருக்கிறீர்களே?
என்னுடைய திரையுலக பயணத்தில் நான் விஷால், பசுபதி, சிம்பு, ஆர்யா ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த படத்தில் கதிர் உடன் நடித்திருக்கிறேன்.
நாயகி...?
சாந்தினி. நல்ல தமிழ் பேசும் நாயகியுடன் பணியாற்றியது மறக்க இயலாதது.
குதிரைப் பந்தயம் குறித்த படம் சூதாட்டத்தை ஊக்குவிக்காதா?
இல்லை. இந்த படத்தில் ஒரு மெசேஜும் இருக்கிறது. குதிரைப் பந்தய சூதாட்டத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த படம் சொல்கிறது.