பேய்கள்கூட பயப்படும் - சந்தானம் பேட்டி

சனி, 21 மே 2016 (14:52 IST)
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்துள்ள  படம், தில்லுக்கு துட்டு. இன்றைய காலகட்டத்தில் போணியாக சாத்தியமுள்ள பேய் கதை. படம் குறித்த  சந்தானத்தின் கருத்துகள்...


 
 
நீங்களும் ஹாரர் ஜோதியில் இணைந்துவிட்டீர்களே...?
 
இந்த ஹாரர் படம் மற்ற படங்களிலிருந்து வித்தியாசமானது. இதுவொரு காதல் கதை, ஹாரர் இதில் இணைந்து  வரும். 
 
என்ன மாதிரியான வித்தியாசம்;?
 
படத்தின் பெயரில் இருப்பது போன்று, இந்த கதையின் நாயகன் தனது திறமையை காட்ட எதையும் செய்யக்  கூடியவன். பேய்கள்கூட இவனைக் கண்டு பயப்படும். 
 
லொள்ளு சபா ராம்பாலாவுடன் இணைந்திருப்பது பற்றி...?
 
அவர் என்னுடைய குரு. என்னை லொள்ளு சபாவில் அறிமுகப்படுத்தியவர். கவுண்டர் காமெடிதான் அவரது பலம்.  என்னுடைய பலம் என்னவென்பது அவருக்கு தெரியும். காமெடி எந்து வந்துவிட்டால் எதிலும் காம்ப்ரமைஸ் செய்யாதவர். 
 
படம் எப்போது வெளிவருகிறது?
 
டீசரை வெளியிட்டிருக்கிறோம். ஜுன் மத்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.
 
வடக்கிலிருந்து ஹீரோயினைத்தான் அழைத்து வருவார்கள். இந்தமுறை வில்லனையும் அழைத்து  வந்திருக்கிறீர்களே?
 
சௌரப் சுக்லா பிகே படத்தில் செய்திருந்த வேடமும், அவரது நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரை  அணுகினோம். அவருக்கும் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தது. பொதுவாக கமல் மட்டும்தான் தென்னிந்தியாவிலிருந்து என்னை அழைப்பார். ஆனால், இந்த வேடம் எனக்குப் பிடித்திருக்கிறது என்று நடிக்க  ஒப்புக் கொண்டார்.
 
உங்களின் சர்வர் சுந்தரம் படம் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரத்துடன் ஒப்பிடப்பட வாய்ப்புள்ளதே...?
 
அப்படி இருக்காது என்று நினைக்கிறேன். இரண்டுக்குமான காலகட்டம், ப்ளாட் எல்லாம் வேறு. இன்றைய  ஆடியன்ஸ் அதனை புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
 
காமெடி வேடங்களை மிஸ் செய்வதாக உணர்கிறீர்களா?
 
அப்படியில்லை. நான் நாயகனாக நடித்தாலும் எல்லாமே காமெடியோடு சேர்ந்த கதாபாத்திரங்கள். அதனால்  அப்படியொரு எண்ணம் இதுவரையில்லை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்