2017 எனக்கு நம்பிக்கை தரும் ஆண்டு - நடிகை சிருஷ்டி டாங்கே பேட்டி

வியாழன், 26 ஜனவரி 2017 (14:38 IST)
யுத்தம் செய் படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகமானவர். சின்னச்சின்ன படங்களில் தலைகாட்டி, இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்து, பிற மொழியிலும் தேடிவந்து ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் சிருஷ்டி டாங்கே. மோகன்லாலுடன் மலையாளப் படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்ட மகிழ்ச்சியில் இருப்பவரின் பேட்டி...


 
 
இது வரையான திரைவாழ்க்கை எப்படி இருக்கிறது...?
 
நான் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். நான்கு படங்கள் வெற்றி பெற்று நானும் இந்த ரேசில் சேர்ந்திருக்கிறேன். ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது.
 
2016 எப்படி இருந்தது?
 
என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் பல படங்கள் சென்ற வருடம் வெளியானது. முக்கியமான தர்மதுரை படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
 
இந்த வருடம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
 
இன்னும் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். குறைந்தது பத்து படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.
 
முக்கியமாக எதிர்பார்க்கும் படம்...?
 
இப்போதைய என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம், மோகன்லால் நடிக்கும் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேஜர் ரவி அப்படத்தை இயக்குகிறார் என்றதுமே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.
 
மோகன்லால் ஜோடியா...?
 
இல்லை, அலலு சிரிஷுக்கு ஜோடியாக நடிக்கிறேன். மோகன்லாலுடன் நடிக்க ஒப்பந்தமான உடனேயே, எப்போது அவருடன் நடிப்போம் என்று துடித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு ஜாம்பவானுடன் நடித்த பெருமை ஏற்பட்டது.
 
படம் பற்றி சொல்லுங்க...?
 
1971 பிகைண்ட் தி பார்டர் என்ற இந்தப் படம், மலையாளத்தில் எனக்கு முதல் படம். ராணுவம் சம்பந்தப்பட்ட கதை.
 
உங்கள் கதாபாத்திரம்?
 
நான் இதில் தமிழ் பேசும் பெண்ணாக வருகிறேன்.
 
படத்தின் சிறப்பம்சம்...?
 
இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று ஐந்து மொழிகளில் தயாராகிறது. நான் நடிக்கும் முதல் ஐந்து மொழி படம் இது.

வெப்துனியாவைப் படிக்கவும்