கமர்ஷியல் படங்களில் மூணே மூணு வார்த்தை கொஞ்சம் வித்தியாசமான முயற்சி - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேட்டி

வெள்ளி, 20 பிப்ரவரி 2015 (12:32 IST)
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூணே மூணு வார்த்தை படத்தில் நடித்துள்ளார். நடிப்பதற்கான வாய்ப்புகளை மறுத்து வந்தவர், இந்தப் படத்தில் நடிக்க இரண்டு காரணங்கள். ஒன்று படத்தின் கதை. இன்னொன்று படத்தை தயாரித்திருப்பது எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி.சரணின் கேப்பிடல் ஃபிலிம்ஸ் வொர்க்ஸ்.
மூணே மூணு வார்த்தையில் எப்படி கமிட்டானீங்க?
 
இந்தப் படத்தில் நான் முதலில் நடிப்பதாக இல்லை. நானும் லட்சுமியும் நடித்த மிதுனம் தெலுங்குப் படத்தைப் பார்த்த இயக்குனர் மதுமிதா, வயதான மூத்த தம்பதியர் கதாபாத்திரத்தில் நடித்தே ஆகணும் என்று கேட்டார். அப்படிதான் இந்தப் படத்தில் நடித்தேன்.
 
கதையில் உங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டதா?
 
ஆரம்பத்தில் நாயகன் அர்ஜுனின் பெற்றேnராக இருந்த கதாபாத்திரத்தை எங்களுக்காக தாத்தா, பாட்டி என்று மாற்றியமைத்தார் மதுமிதா. 
 
இயக்குனர் மதுமிதா பற்றி...?
 
ரொம்பவும் திறமைசாலி. எப்படி ஒரு நடிகரிடம் வேலை வாங்குவது என்பதை நன்றாக தெரிந்தவர். 
 
படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
 
இந்தப் படத்தில் நடித்தது நல்ல புதிய அனுபவமாக இருந்தது. இக்கால தலைமுறையினரிடமிருந்து பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிற வாய்ப்பாகவும் அமைந்தது. 
 
படத்தை முழுமையாக பார்த்தீர்களா?
 
நான் நடித்த போர்ஷனை மட்டும் டப்பிங்கில் பார்த்தேன். நல்ல திறமையான இளைஞர்கள். நல்ல படத்தை எடுத்திருக்காங்க. இனிமேல்தான் படத்தை முழுமையாக பார்க்கணும்.
 
படத்தில் அறிமுக இசையமைப்பாளரை பயன்படுத்தியிருக்கிறார்களே?
 
அறிமுக இசையமைப்பாளர் கார்த்திகேயமூர்த்தி தனது இசையால் இந்தப் படத்துக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார். இவர் பழம்பெரும் மிருதங்கக் கலைஞர் மூர்த்தியின் பேரன் என்பது எனக்கு பிறகுதான் தெரியும்.
 
நீங்கள் பாடியிருக்கிறீர்களா?
 
வாழும் நாள் என்ற பாடலை இந்தப் படத்தக்காக பாடியிருக்கிறேன். கார்த்திகேயமூர்த்தி இசையில் அந்த வரிகளைப் பாடும்பொழுது என் கண்கள் கலங்கியது. 
 
படத்தை தயாரித்திருக்கும் உங்கள் மகன் எஸ்.பி.பி.சரணைப் பற்றி...?
 
பல இளைஞர்களின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும்ரிஎஸ்.பி.பி.சரண் என் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
 
படத்தைப் பற்றி மூணே மூணு வார்த்தையில்...?
 
இப்போது தமிழில் வரும் கமர்ஷியல் படங்களில் இது வித்தியாசமான முயற்சி. மூணே மூணு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஹைக்கூ கவிதை.

வெப்துனியாவைப் படிக்கவும்