தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது புதுசு இல்லை - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (11:30 IST)
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் அம்மணி. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்து பேசினார்.

 
அம்மணி படம் பற்றி ...?
 
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களுக்குப் பிறகு அம்மணி படத்தை இயக்கியிருக்கிறேன். நானும் வயதான பெண்மணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளோம். 
 
படம் வெளியாகும் நேரம்... எப்படி உணர்கிறீர்கள்...?
 
ஒரு குழந்தையை 10 மாதங்கள் சுமந்து பிரசவ நேரத்தில் சந்தோஷமும், பயமும் ஏற்படுமே அந்த உணர்வில் நான் இருக்கிறேன் தயாரிப்பாளர்...?
 
இது மாதிரி ஒரு படத்தை தயாரிக்க முன்வருவது பெரிய விஷயம். அந்த துணிச்சல் வெண் கோவிந்தாவுக்கு இருந்தது. இந்த படத்தை அவர் வியாபார நோக்கம் இல்லாமல் தயாரித்து இருக்கிறார்.
 
உங்களுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாமே...?
 
எனக்கும், அவருக்கும் இடையே கொஞ்சம் கருத்து வேறுபாடு இருந்தது. சினிமாவில் ஒரு டைரக்டருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதும், பின்னர் அந்த கருத்து வேறுபாடு நீங்கி சமரசம் ஆவதும், புதுசு அல்ல.
 
பெண்கள் படம் இயக்குவதால் ஏற்படும் சௌகரியம்...?
 
சினிமாவில், பெண் டைரக்டர்களுக்கு நிறைய சௌகரியங்கள் உள்ளன. 200 படங்கள் திரைக்கு வந்தால், அதில் 4 பேர் மட்டுமே பெண் டைரக்டர்களாக இருக்கிறார்கள். அதன் மூலம் பெண் டைரக்டர்களால் மிக சுலபமாக அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்க முடிகிறது.
 
அசௌகரியம்...?
 
படங்களை இயக்கும்போது வீட்டையும், குடும்பத்தையும் கவனிக்க முடியாது. இதையெல்லாம் தாண்டி, படங்கள் வெற்றி பெறும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்