தொட்டதுக்கெல்லாம் அட்ஜெஸ்ட்மென்ட்... படுத்தால் தான் பட வாய்ப்பா? பகீர் கிளப்பிய பிரியா பவானி ஷங்கர்!

வியாழன், 15 ஜூன் 2023 (18:01 IST)
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாலியல் தொல்லை சினிமாத்துறையில் மட்டும் அல்ல எல்லா துறையிலும் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து சொல்லவேண்டும். அப்படி சொல்லும் அந்த பெண்களுக்கு இந்த சமூகம், பாதுகாப்பையும் உறுதியை கொடுக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு நீ ஏன் இதை முன்பே சொல்லவில்லை என்றும் இப்போ ஏன் சொல்கிறாய் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணையே  குற்றவாளியாக்கக்கூடாது. அப்படி இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இதுபோன்ற  பிரச்சனையை அறவே ஒழிக்க முடியும் என வெளிப்படையாக பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்