வேறு மாதிரியாக ஒரு சினிமா - 'கயல்' இயக்குநர் பிரபு சாலமன் பேட்டி

புதன், 18 ஜூன் 2014 (12:44 IST)
மைனா, கும்கி ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிவரும் படம், கயல். இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணியில் பிஸியாக இருந்த பிரபு சாலமனிடம் பேசினோம்..
 
 
கயல் என்ன மாதிரியான படம்?
 
இதில் காதல் இருக்கு என்றும் சொல்ல முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால் வழக்கமான படம் இல்லை. வழக்கமான சினிமாவைப் பத்தாண்டுகளாக ரசிகனும் மறந்து விட்டான் படைப்பாளிகளும் மறந்து விட்டார்கள். வேறு மாதிரியாக ஒரு பாதையை நோக்கி சினிமா பயணமாகிக் கொண்டிருக்கிறது.
 
சுனாமி தாக்கிச் சரியாகப் பத்தாண்டுகளாகி விட்டது அந்தச் சுனாமியை இதில் கதைக் கருவாக்கி இருக்கிறேன். திரையில் கயல் படத்தைப் பார்க்கும் போது மனசு அப்படியே பதை பதைத்துப் போகும். 56 டிராக் இசை படத்தை இன்னும் பல மடங்கு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும்.
 
மைனா, கும்கி, கயல் அடுத்து என்ன மாதிரியான படத்தை எடுப்பதாக உத்தேசம்?
 
சிங்கத்தை வைத்து ஒரு புதிய முயற்சி எடுக்க எண்ணம் இருக்கு.
கயல் படத்தின் ஹீரோ, ஹீரோயினான சந்திரன், ஆனந்தி இருவரைப் பற்றி....
 
பருவம் அடைந்து சில மாதங்களே ஆன நாயகி வேடத்திற்கு எவ்வளவோ பேரைப் பார்த்தோம் திருப்தி இல்லை. முடிவில் வந்தவர் ஆனந்தி. முகத்தில் இருந்த குழந்தைத் தனம் கச்சிதமாகப் பொருந்திப் போனார்.
 
அதே மாதிரி என்னுடனேயே, என் கதாபாத்திரத்துக்கு ஏற்ப பயணமாகிற ஹீரோவாக இருந்தார் சந்திரன். நேரம் காலம் பார்க்காமல் ஒத்துழைக்கிற ஹீரோதான் தேவை.
 
உங்கள் கதைக்கு பிரபலமான நடிகர்கள் யாரும் பொருந்திப் போக மாட்டார்களா?
 
பிரபலமான நடிகர்களை என் இழுப்புக்கெல்லாம் இழுக்க விருப்பமில்லை ..அவர்களுக்கு அடுத்தடுத்து கமிட்மெண்ட்ஸ் இருக்கும் ..அதை தடுக்க விருப்பமில்லை .தேவைப் படும் பட்சத்தில் பிரபல நடிகர்களை வைத்து இயக்குவேன்.
 
கயல் எப்ப திரைக்கு வரும்?
 
ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கலாம். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனும் நாங்களும் அதற்கான முழு உழைப்பில் இருக்கிறோம்.
 
இமான் - பிரபு சாலமன் காம்பினேசன் எப்படி?
 
ஒரே நேர்கோட்டில் ஒரே மாதிரியான சிந்தனையில் இருவருமே பயணிப்பதால் தான் ஹிட் பாடல்களைக் கொடுக்க முடிகிறது. ஹிட்  பாடல்கள் படத்திற்கான வெற்றியை நிர்ணயிக்கின்றன. அந்த விதத்தில் ஒருவருக்கு ஒருவர் நம்பிகையுடன் இருக்கிறோம் என்றார் பிரபு சாலமன்.  

வெப்துனியாவைப் படிக்கவும்