அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது மோசமான பழக்கம் - சமந்தா பேட்டி

புதன், 31 ஆகஸ்ட் 2016 (13:29 IST)
உள்ளத்தில் இருப்பதை உதடுவழி பேசிவிடுகிறவர் சமந்தா. அவர் உள்ளத்தை மூடி வைத்திருக்கும் ஒரே விஷயம், காதல் மற்றும் திருமணம். அவர்தான் முதலில் மீடியாவில் தனது காதலை வெளிப்படுத்தினார். என்றாலும் அடக்கிவாசிக்கும்படி காதலரின் வீட்டில் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.


 
 
தன்னைப் பற்றியும், வதந்திகள் குறித்தும் சமந்தா அளித்த பேட்டியின் தமிழாக்கம்...
 
படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டீர்களே...?
 
அப்படியில்லை. மனசுக்குப் பிடித்த கதையில் நடிக்கவே செய்கிறேன். சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கயிருக்கிறேன். 
 
தெலுங்கில் புதுப்படம் எதுவும் ஒப்புக் கொள்ளவில்லையே...?
 
எல்லா நடிகைகளுக்கும் இதுபோல் இடைவெளி ஏற்படுவது சகஜம்தான்.
 
விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதால்தான் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுவது பற்றி...?
 
என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருது. சொந்த வாழ்க்கையையும் விவாதித்துக் கொண்டு வருகிறார்கள். இது உண்மையிலேயே வருத்தப்பட வைக்கும் விஷயம். நாட்டில் நல்ல விஷயங்கள் எவ்வளவோ உள்ளது. அதைப் பற்றி பேசுவதுதான் வரவேற்கக் கூடியதாக இருக்கும்.
 
கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
 
மற்றவர்களைப் பற்றி ஏதாவது பேசிக் கொண்டேயிருப்பது கறை சொல்வது சரியில்லை. சிலர் அடுத்தவர்களை எப்போதும் கேலி, கிண்டல் செய்து கொண்டேயிருப்பார்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது மோசமான பழக்கம். அதை நான் விரும்புவதில்லை.
 
நல்லதை பேசினால் நல்லது விளையும் என்று நினைக்கிறீர்களா?
 
மற்றவர்களை குறை பேசி திரிவதால் எந்த பயனும் இல்லை. நான் நல்லவைகளை மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்படி பேசுவதன் மூலம் நல்ல சிந்தனைகள் உருவாகும். அது உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
 
இந்த விஷயத்தில் உங்க அறிவுரை என்ன?
 
சமூகத்தில் தினமும் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. அவைகள் செய்திகளாகவும் வருகிறது. ஒவ்வொருவரும் நல்ல விஷயங்களை பேசுவதன் மூலம் நல்ல நடத்தைகளில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் சமூக விரோத சம்பவங்கள் நடப்பது தவிர்க்கப்படும். நாம் ஒவ்வொருவரும் நல்ல விஷயங்களை பேசுவதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்