எனக்கு லிவிங் டூ கெதர்-தான் பிடிக்கும் - நடிகை ஓபன் டாக்

திங்கள், 26 டிசம்பர் 2016 (12:11 IST)
திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லையென்றும், திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதையே தான் விரும்புவதாக நடிகை நிகிஷா பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கிய  ‘புலி’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன்பின் சில கன்னட படங்கள், தமிழில்,  தலைவன், நாரதன் என்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் ஷக்தி கதாநாயகனாக நடிக்கும் ‘7 நாட்கள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
பாலிவுட் படங்களில் அறிமுகமாக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. ஆனால், எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக புலி படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்துவிட்டது.
 
திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை. திருமனம் செய்து கொள்வோரை பார்த்தால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ திருமணம் என்ற பந்தம் தேவையில்லை என்பது என் கருத்து.  திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனக் கூற முடியாது.


 

 
2030ம் ஆண்டில் நாட்டில் திருமணம் என்ற ஒன்றே இருக்காது.  தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வதுதான் அப்போது நடைமுறையில் இருக்கும். எனக்கு திருமனம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. ஆனால் எனக்கு பிடித்தவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வேன்” என்று கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்