2017 பெட்டராக இருக்கும் என நினைக்கிறேன் - ஹன்சிகா பேட்டி
சனி, 31 டிசம்பர் 2016 (15:37 IST)
ஹன்சிகாவுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், 2016 ஹன்சிகாவுக்கு டல்தான். அரண்மனை 2 படம் ஓர் ஆறுதல். 2017 -இல் ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் அதிரடியாக களமிறங்கவிருப்பவர், அப்படம் குறித்து பேசினார்.
போகன் எப்படி வந்திருக்கு?
படம் நல்லா வந்திருக்கு. சரியா சொன்னா, ரொம்ப கிளாஸா வந்திருக்கு.
மீண்டும் ரோமியோ ஜுலியட் டீம்... எப்படி இருந்தது?
படத்தை பொறுத்தவரை ரோமியோ ஜுலியட்லயிருந்து டோட்டலா வேற மாதிரி இருக்கும். ஆனா, அதே டீம். நானும் ஜெயம் ரவியும் செம கலாட்டா பண்ணுவோம். படப்பிடிப்பு ரொம்ப வேடிக்கையா இருக்கும். போகன் செட்லதான் இந்த வருஷம் நான் அதிகம் சிரித்தது.
போகனில் உங்க ரோல் என்ன மாதிரி?
படத்தோட முக்கியமான தூணே என்னோட கதாபாத்திரம்தான். ஹீரோவை மோட்டிவேட் பண்றது. ஸீரோ நிலைக்கு வர்ற ஹீரோவை மீண்டும் ஹீரோவாக்கிற வேடம்.
அரவிந்த்சாமியும் இதில் நடித்திருக்கிறார்...?
அரவிந்த்சாமி சார் செம ஸ்மார்ட். அவரை ஸ்கீரீன்ல பார்க்கிறதே பெண்களுக்கு செமையான ட்ரீட்தான்.
ஜெயம் ரவியுடனான உங்க கெமிஸ்ட்ரி எப்படி?
செமையாக வொர்க் அவுட் ஆகியிருக்கு. ஹேர் ஸ்டைலிஸ்டே அதை எங்கிட்ட சொன்னார்.
சோஷியல் மீடியாவில் இருப்பது ஆரோக்கியமாக உள்ளதா?
ரசிகர்கள்கிட்ட பேச, அவங்க கருத்துக்களை தெரிஞ்சுக்க மட்டும்தான் சோஷியல் மீடியாவை பயன்படுத்துறேன். என் ட்விட்டர் பக்கம் என் ரசிகர்களுக்கானது, அவ்வளவுதான்.
போகன் பார்த்திட்டு பிரபுதேவா என்ன சொன்னார்?
அவர்கிட்ட பாராட்டு வாங்கிறது கஷ்டம். போகன் பார்த்துட்டு என்னை பாராட்டியது மறக்க முடியாத விஷயம்.
2017 எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த வருடத்தைவிட பெட்டராக இருக்கும்னு நினைக்கிறேன்.