ராஜேஷ் என்னோட எனிடைம் ப்ரெண்ட் - ஆர்யா பேட்டி

வியாழன், 30 ஜூலை 2015 (15:22 IST)
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. சுருக்கமாக, விஎஸ்ஓபி. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் இரண்டாவது படம். ஆர்யாவின் 25 -வது படமும்கூட. படத்தை குறித்தும், நண்பர்கள் ராஜேஷ், சந்தானம் குறித்தும் பேசுகையில் வார்த்தைகள் ஆர்யாவின் மனதிலிருந்து வருகின்றன.
 

 

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உங்களின் 25 -வது படம். எப்படி ஃபீல் பண்றீங்க?

ஒரு ஆக்டருக்கு 25 -வது படம் பெரிய விஷயம். என்னை வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மீடியா இல்லாம இதை எட்டியிருக்க முடியாது. ஒவ்வொரு படமுமே எனக்கு ஒரு அச்சீவ்மெண்ட்.

நீங்களே இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறீர்கள். அதுபற்றி?

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் போது, த ஷோ பீப்பிள்ங்கிற பேனரை ஆரம்பிச்சேன். 25 -வது படத்துல அந்த டீம்கூட படம் பண்ணுனது சந்தோஷமாக இருக்கு. நான் லக்கின்னு சொல்வேன்.

பாடல்கள் எப்படி வந்திருக்கு?

சூப்பர்ப் ஆல்பம். பாடல் வரிகள் ரொம்ப ஈஸியாவும், கேச்சிங்காகவும் இருக்கு. ஒரு ஆல்பமா ரொம்ப திருப்தியாகவும் பியூட்டிஃபுல்லாகவும் அமைஞ்சிருக்கு.

ராஜேஷுடனான உங்க நட்பு பற்றி சொல்லுங்க...?

எஸ்எம்எஸ் (சிவா மனசுல சக்தி) படத்துல கெஸ்ட் ரோல் பண்ணுனப்போதான் நான் அவர்கூட அறிமுகமானேன். அந்த ப்ரெண்ட்ஷிப்ல, பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பண்ணுனோம். இப்போ, விஎஸ்ஓபி படம் பண்றோம். பாஸ் என்கிற பாஸ்கரனப்பவே இன்னொரு படம் பண்ணலாம்னு அவரை கேட்டுகிட்டே இருந்தேன். பட், அவர் வேற படம் பண்ணிட்டுவர லேட்டாயிடுச்சி. அவர் என்னோட எனிடைம் ப்ரெண்ட்.

சந்தானம்...?
 
சந்தானம் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதினைஞ்சு ஆப்ஷன் வச்சிருப்பார். அவர் இதுவரை சினிமாவில் பேசுன டயலாக்கை சேர்த்துப் பார்த்தா, தமிழ்ல வந்த படங்களோட டயலாக்கைவிட அதிகமிருக்கும். அந்தளவு ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு டயலாக்குக்கும் வொர்க் பண்ணுவார். சந்தானம் பெர்பாமென்ஸ்ல எனக்குப் பிடிச்சது ஓகே ஓகே. அதைவிட பிரமாதமாக இதில் பண்ணியிருக்கார்.


 






நாயகி பற்றி சொல்லவில்லையே...?
 
தமன்னா ஹீரோயின். தமன்னாவோட பெர்பாமென்ஸ் படத்துல ஹைலைட்டா இருக்கும்.
 
படப்பிடிப்பு அனுபவம் எப்படியிருந்தது?
 
ஒரு ஃபேமிலியாதான் என்ஜாய் பண்ணி இந்தப் படத்தை ஷுட் செய்தோம். படம் நல்லா வர்றதுக்கு மொத்த டீமுமே உழைச்சிருக்கு. இப்படியொரு அனுபவம் கிடைச்சதே சந்தோஷமாக இருக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்