எழுதி வச்சுக்குங்க... ஆர்யாவுக்குதான் முதல்ல திருமணம் - விஷால் பேட்டி
வியாழன், 14 ஜனவரி 2016 (09:35 IST)
கதகளி படம் நன்றாக வந்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் விஷால்.
நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டம் வெற்றி பெற்றது இன்னொரு மகிழ்ச்சியான விஷயம்.
நடிகர் சங்கம், நடிக்கிற படங்கள், திருமணம் என்று எதைக் கேட்டாலும் திருத்தமாக வருகிறது பதில்.
கதகளி படத்தின் கதை என்ன?
இதுவொரு த்ரில்லர் படம். ஒரு போன் அழைப்பு ஒரு மனிதனை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை.
கொலைப்பழியில் மாட்டிக் கொள்ளும் ஒருவன் அதிலிருந்து தப்பிக்க உண்மையான கொலையாளி யார் என்று கண்டுபிடித்தாக வேண்டியிருக்கிறது. அதற்காக அவன் செய்கிற முயற்சிகள்தான் படம். ஒரே இரவில் நடக்கிற கதை.