விளம்பரங்களை கட்டுப்படுத்தினால்தான் சின்னப் படங்களை ரிலீஸ் செய்ய முடியும் - ரமேஷ் கண்ணா பேட்டி

ஜே.பி.ஆர்

ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (14:00 IST)
ரமேஷ் கண்ணா அடிப்படையில் ஒரு இயக்குனர். தொடரும் படத்தை இயக்கியதோடு இயக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து நடிகராக தொடர்கிறவர். படம் இயக்குவதற்கு முன்பே நடிகரானதால் அதுவே அவரது அடையாளமாகிப் போனது.
 
இயக்கம் தெரிந்தவர் என்பதால் படத்தை மட்டுமின்றி படம் எடுப்பதில் உள்ள சிரமங்களையும் அறிந்தவர். முருகாற்றுப்படை பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்தும், சினிமாவின் இன்றைய நிலை குறித்தும் அவர் பேசியவை இங்கே உங்களுக்காக.
 
சினிமா எப்படி இருக்கு?
 
இப்போ படங்களை எடுக்கிற ரொம்ப ஈஸி. ஒரு கோடி ஒன்றரை கோடியில எடுத்திரலாம். ஆனா, ரிலீஸ் பண்ண முடியாது. ரிலீஸ் பண்றதுக்கு இருக்கிற பாடு இருக்கே... தாங்க முடியாத பாடு. ஏன்னா அவ்ளோ விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு. பெரிய படங்களோட போட்டிப் போட்டு விளம்பரம் பண்ணி படத்தை ரிலீஸ் பண்றது சாதாரண விஷயம் கிடையாது. 
 
விளம்பரங்கள் வேண்டாம்னு சொல்றீங்களா?
 
நான் ஒவ்வொரு ஆடியோ ரிலீஸிலும் சொல்ற முதல் வார்த்தை, விளம்பரங்களை கட்டுப்படுத்துங்கள். அப்போதான் சின்னப் படங்களை ரிலீஸ் பண்ண முடியும்.
 
முன்னாடி ஒரு பக்கம் இரண்டு பக்கம் விளம்பரம் கொடுப்பாங்க. தயாரிப்பாளர்கள் சங்கம் அதை மாற்றி, குவாட்டர் பக்கம்தான் விளம்பரம் தரணும்னு சட்டம் கொண்டு வந்தாங்க. அதனால சின்னப் படமும், பெரிய படமும் வித்தியாசமில்லாமல் இதுவரை போய்கிட்டிருக்கு. 
 
முருகாற்றுப்படையில் உங்க கோ ஆர்டிஸ்ட் தேவதர்ஷினி பற்றி சொல்லுங்க...?
 
தேவதர்ஷினி மேடத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, சரண்யா மேடத்துக்குப் பிறகு கொடிகட்டிப் பறக்கிறது டாப்மோஸ்ட் ஆர்டிஸ்ட். ரொம்ப என்கரேஜ் பண்ணக் கூடியவங்க.
 
படத்தின் ஹீரோ சரவணன்...?
 
நான் சரவணன்கூட நிறைய படம் நடிச்சிருக்கேன். இந்த சரவணன் இல்லை, நடிகர் சூர்யா சரவணனை சொல்றேன். அவரை மாதிரி இவரும் பெரிய லெவல் ஹீரோவாகணும்னு வாழ்த்துறேன். 
 
முருகாற்றுப்படையின் சிறப்பு பாடல்கள் என்கிறhர்களே?
 
கணேஷ் ராகவேந்திரா அற்புதமான பாடல்களை போட்டிருக்கார். அவரோட இசையில் மோகன் ராஜ் சில அற்புதமான வரிகளை எழுதியிருக்கார். எறும்புகூட தான் சாகுறவரை போராடும்ங்கிற வார்த்தைகள் சிறப்பா இருந்தது. ஒரு இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் சரியா செட்டானால்தான் நல்ல பாட்டு கிடைக்கும்.
 
இன்னைக்கும் எம்.எஸ்.வி. சார் கண்ணதாசன்தான் எல்லாம்னு சொல்வார். எனக்கு ட்யூன் வந்தா கண்ணதாசனுக்கு பாடல் வரும், அவருக்கு நல்ல பாடல் வரி வந்தா எனக்கு நல்ல ட்யூன் வரும்னு சொல்வார்.
 
அதே மாதிரி இவங்களும் நல்ல பாடல்களை தந்திருக்காங்க. கணேஷ் ராகவேந்திரா நிச்சயம் பெரிய இசையமைப்பாளராக வருவார். ஏன்னா அவரோட தாத்தா எஸ்.பாலசந்தர் அவர்கள். வீணை பாலசந்தர். பொpய ஜீனியஸ், இசை மேதை.
 
ஒளிப்பதிவாளர்...?
 
ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ரான்டியோட (ரத்னவேலு) அசிஸ்டெண்ட். அவரோட வலது கை மாதிரி. ரான்டி லிங்கா படம் பண்ணிட்டிருக்கார். அவரோட அசிஸ்டெண்ட் எப்படி பண்ணியிருப்பார்னு நீங்க படம் பார்த்தாலே தெரிஞ்சிடும். 
 
இயக்குனர் முருகானந்தத்தைப் பற்றி...?
 
முருகானந்தத்தை புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்னு சொல்றாங்க. அதெல்லாம் சும்மா. ஒரு ஷாட் எவ்வளவு நேரம் ஆகும்ங்கிறதை தெரிஞ்சுகிட்டு அதுக்கேற்ற மாதிரி அனைத்தையும் கொண்டு வந்து தரணும். அது சாதாரண வேலையில்லை.

சேது படத்துல வொர்க் பண்ணியிருக்கார், அமீர், சசிகுமார்கூட வொர்க் பண்ணியிருக்கார். அவர் டெக்னிக்கலா  பெஸ்ட். கண்டிப்பா மாபெரும் வெற்றி பெறுவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்