கவர்ச்சியாகவும் நடிப்பேன் - பேரா‌ண்மை தன்ஷிகா பேட்டி

புதன், 24 ஜூன் 2009 (19:08 IST)
webdunia photoWD
பேராண்மையில் நடித்து வருகிறார் தன்ஷிகா. உயரமாக, மாநிறத்தில் பாலுமகேந்திரா பட ஹீரோயின் போல அம்சமாக இருக்கிறா‌ர். தமிழ் சரளமாக விளையாடுகிறது. தமிழ்ப்பட ஹீரோயின் இவ்ளோ அழகாக தமிழ் பேசுகிறாரே என்று ஆச்ச‌ரியமாக கேட்டால், பூர்வீகமே தஞ்சாவூர்தானே என புன்னகைக்கிறார்.

பார்த்தா படிக்கிற பொண்ணுபோல இருக்கீங்க. அதுக்குள்ள எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?

உண்மையிலேயே படிச்சிட்டுதான் இருக்கேன். பிளஸ் ஒன். படிச்சிட்டே விளம்பரங்களில் நடிக்கிறேன்.

பேராண்மை வாய்ப்பு எப்படி கிடைச்சது?

சென்னை வர்த்தக மையத்தில் நடந்த சினிமா டுடே எக்ஸுபிஷனுக்கு வந்த என்னை அங்க வச்சு எ‌ஸ்.பி. ஜனநாதன் சார் பார்த்தார். உன்னை மாதி‌ி ஒரு பொண்ணுதான் வேணும்னு தன்னோட பேராண்மையில் நடிக்க வைச்சார்.

அவர் உங்களை செலக்ட் பண்ண ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருந்ததா?

படத்துல எனக்கு என்.சி.சி. ஸ்டூடண்ட் கேரக்டர். ஸ்கூல்ல நான் அத்லெடிக் ப்ளேயரா இருக்கிறதால அந்த கேரக்டருக்கு என்னை அவர் செலக்ட் பண்ணி‌ருக்கலாம்.

படத்தோட கதை என்ன?

என்.சி.சி. ஸ்டூடண்‌ட்ஸுக்கும் ஃபாரஸ்ட் ஆஃபிஸருக்கும் இடையில் நடக்கிற கதை. காட்டுக்குள்ள எடுத்திருக்காங்க. இதுக்கு மேல கதை பற்றி கேட்காதீங்க.

இந்தப் படத்துக்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுத்திட்டீங்களாமே?

வில் வித்தை, சிலம்பாட்டம், சுருள் கத்தி சண்டை, சினிமா சண்டை, துப்பாக்கி சுடுதல்னு ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லித் தந்தாங்க. பேசிக்கா நான் அத்லெடிக் ப்ளேயர் என்பதால் சீக்கிரமே எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.

படத்தில் ஐந்து நாயகிகள் இருப்பதால் உங்களுக்கு முக்கியத்துவம் இருக்குமா?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை முதல் ஹீரோயின், செகண்ட் ஹீரோயின்னு எதுவும் கிடையாது. ஐந்து விதமான கேரக்டர்கள். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு விதமான முக்கியத்துவம். ஏன்னோடது சூப்பரான கேரக்டர்.

யாரை மாதி‌ி நடிக்கணும்னு விரும்பறீங்க?

webdunia photoWD
அப்படி எதுவும் விருப்பம் இல்லை. பேராண்மையை பொறுத்தவரை ஹரலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியோட பாடிலாங்வே‌ஜ், மேன‌ரிஸத்தை பின்பற்றி நடிக்க சொன்னார் இயக்குனர். அப்படியே பண்ணியிருக்கேன்.

எந்த மாதி‌ி கேரக்டர்களில் நடிக்க ஆசை?

பருத்திவீரன் ப்‌ரியாமணி, பிதாமகன் சங்கீதா மாதி‌ி கேரக்டர் மீது விருப்பம் உண்டு. ஆனாலும், மரத்தைச் சுத்தி டூயட் பாடதான் வாய்ப்பு இருக்குன்னா அதுக்கும் ஓ.கே.

கவர்ச்சி... ?

அதுதான் எல்லா வேடத்திலும் நடிப்பேன்னு சொல்லிட்டேனே. கவர்ச்சியான கேரக்டர்கள் வந்தாலும் தயங்காம நடிப்பேன்.