இது வேற மாதிரி படம் - விக்ரம் பிரபு பேட்டி

வெள்ளி, 13 டிசம்பர் 2013 (11:38 IST)
இன்று இவன் வேற மாதிரி ரிலீஸ். எல்லா இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் முதல் படத்தைவிட சவாலானது இரண்டாவது படம். இந்தப் படத்தை இயக்கிய சரவணனுக்கும், நடித்த விக்ரம் பிரபுக்கும் இது இரண்டாவது படம். விக்ரம் பிரபு அடக்கமாகப் பேசுகிறார், கடுமையாக உழைக்கிறார், தன்னம்பிக்கையோடு படங்களை செய்கிறார். வெற்றிகள் தொடரும் போதும் இந்த குணங்கள் அவரைவிட்டு விலகாது என்ற நம்பிக்கையை பிரஸ்மீட்டில் அவரது பேச்சு உணர்த்தியது.
FILE

எப்படி இந்தப் படம் உங்களுக்கு அமைந்தது?

நான் முதல் வணக்கம் தெரிவிச்சுக்க விரும்புறது திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி சார், போஸ் சார். கும்கியில என்னை இன்ட்ரடியூஷ் பண்ணுனாங்க. கும்கி எந்த மாதிரி இம்பாக்டை தந்ததுன்னு தெரியும். அதுலயிருந்து மாறுபட்டு வேற மாதிரி படம் பண்ணணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். கும்கி படத்தோட ஆடியோ ரிலீஸ் அன்னைக்குதான் சரவணன் சாரைப் பார்த்தேன். போய் ஹாய் சொன்னேன். ஒரு வாரம் ஆகலை, சரவணன் சார் உங்களை மீட் பண்ணணும்னு சொன்னார் போய் பார்க்கறீங்களான்னு போஸ் சார் சொன்னார். அப்படிதான் இந்தப் படம் ஆரம்பிச்சது.

இது எந்த மாதிரியான படம்?

இது வேற மாதிரியான படம். கும்கியிலயிருந்து முற்றிலும் வித்தியாசமான படம். சரவணன் சார்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம், ஸ்கிரின்ப்ஃளேயை ரொம்ப டைட்டா பண்ணியிருப்பார். எங்கேயும் எப்போதும் பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அமpக்கன் ஸ்கூல் ஆஃப் திங்கிங்ல இருந்து வந்திருக்கேன். அங்க எப்போதும் ஸ்டோரி, ஸ்கிரின்ப்ளே பற்றிதான் பேசுவாங்க. அப்படி ஒருத்தரை பார்க்கும் போது உடனடியா ஒரு அட்டென்ஷன் எனக்ககு வந்தது. கண்டிப்பாக இந்தக் கதையை செய்யலாம்னு உடனே ஆரம்பிச்சோம். சன்டே அன்னைக்கு வொர்க் பண்ண மாட்டார். எனக்கும் சன்டேன்னா வீட்ல பேமிலியோட இருக்கணும். ஸோ அதுவும் ரொம்பப் பிடிக்கும்.
FILE

உங்க டீம் பற்றி...?

இந்தப் படத்துக்கு பெரிய டீம் அமைஞ்சது. சரவணன் சார் சத்யா சாரை உடனே அழைச்சிட்டு வந்திட்டார். பிரபுசாலமன் சார் - டி.இமான் சார்னு சொல்ற மாதிரி சரவண் - சத்யான்னு சொல்லலாம். அவங்க அவ்ளோ ஈஸியா செட்டாயிடுறாங்க. அதே மாதிரி விவேகா சார், நா.முத்துக்குமார் சாரெல்லாம் நல்லா பாட்டு எழுதிக் கொடுத்திருக்காங்க...

கும்கியிலயிருந்து இந்த மாதிரி ஒரு படத்துக்கு வரும் போது என்ன மாதிரி பாடல்கள் தேவையோ அதை கரெக்டா வார்த்தைகளில் கொண்டு வந்திருக்காங்க. அதே மாதிரி வம்சி சார். என்னை பிளட் பிரதர்னுதான் கூப்பிடுவார். அந்தளவுக்கு அடிபட்டிருக்கு. அப்புறம் ராஜசேகர் மாஸ்டர். எந்தளவு உண்மையா செய்ய முடியுமோ அந்தளவு உண்மையா செய்திருக்கிறார். எங்களுக்கும் அந்தளவுக்கு உண்மையா அடிபட்டிருக்கு. ஆனா அதையெல்லாமே ஹேப்பியா என்ஜாய் பண்ணிதான் செய்தோம். இந்த டீம்கூட வொர்க் பண்ணுனது பெருமையாக இருக்கு.
FILE

நாயகி சுரபி...?

என்னோட கோ ஸ்டார் சுரபி. நல்லாவே தமிழ் பேசுவாங்க. ஒரு மாசம் ஆபிஸ்லயே அவங்களுக்கு வொர்க் ஷாப். ஆபிசுக்குள்ள நுழையறப்பவே வணக்கம்னு குரல் கேட்கும். பார்த்தா பொம்மை மாதிரி இவங்க நின்னுகிட்டிருப்பாங்க. படத்துல நல்லா நடிச்சிருக்காங்க.
FILE


லொகேஷன்ஸ்...?

நாங்க செலக்ட் பண்ணுன லொகேஷன்ல படம் எடுக்கிறது கஷ்டம். அதை எந்தளவு அழகா காண்பிக்க முடியுமோ அந்தளவுக்கு அழகா சக்தி சார் காமிச்சிருக்கார். நாங்க ஷுட் பண்ணுன ஒவ்வொரு பில்டிங்கும் 17 மாடி. ஒவ்வொரு மாடிக்கும் லைட் பண்ணுறது ரொம்ப கஷ்டம். அதை சக்தி சார் ரொம்ப அழகா செஞ்சி காமிச்சிருக்கார்.
FILE


கணேஷ் வெங்கட்ராமன்..?

கணேஷ் வெங்கட்ராமன் சார்கூட வர்ற சீன்ஸ் ரொம்ப கம்மியாக இருந்தாலும் நாங்க செட்ல சேர்ந்து இருந்தது நிறைய நாள். இவங்கக்கூட எல்லாம் வொர்க் பண்ணுனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

வெப்துனியாவைப் படிக்கவும்