அனிமேஷன்தான் என்னுடைய முதல் காதல் - சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்

திங்கள், 10 மார்ச் 2014 (19:25 IST)
கோச்சடையான் படத்தின் பாடல்கள் ட்ரெய்லர்கள் வெளியீட்டு விழா முடிந்த கையோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சௌந்தர்யா. சென்னையில் கோச்சடையான் தமிழ்ப் பாடல்களை வெளியிட்டதோடு, தெலுங்குப் பாடல்களையும் வெளியிட என்ன காரணம் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், ரஜினி, ஷாருக்கான், தீபிகா, ரஹ்மான் என்று எல்லோருடைய டேட்ஸும் வாங்கி இன்னொரு விழா நடத்துறது ரொம்ப சிரமம். இந்த‌க் கேள்வி என்றில்லை சங்கடப்படுத்தும் கேள்விகளுக்கும் சந்தோஷத்துடன் பதிலளித்தது ரஜினியின் இளைய மகளின் ஸ்பெஷாலிட்டி.
FILE

கோச்சடையான் பற்றி சொல்லுங்க?

இது எந்த மாதிரி படம்ங்கிறது உங்க எல்லோருக்கும் தெரியும். பெர்பாமன்ஸ் கேப்சர் போட்டோ ரியலிஸ்டிக் ஃபிலிம். நடிப்புப் பதிவாக்க தொழில்நுட்பம். நான் வைரமுத்து அங்கிள்கிட்ட எப்படி தமிழ்ல இதை சொல்றதுன்னு கேட்டு மனப்பாடம் செய்து சொல்றேன். நம்ம நாட்ல இந்த டெக்னாலஜியில் ஒரு முழுப்படம் ஸ்டார்ட் டு என்ட் பண்ணுறது ஃபர்ஸ்ட் டைம். கோச்சடையான் வெறும் விஷுவல் எஃபெக்ட்ஸ் படம் கிடையாது. லைவ் ஆக்டர்ஸ், லைவ் பேக்ரவுண்ட்ஸ், ஸீஜி கேரக்டர்ஸ், ஸீஜி பேக்ரவுண்ட் அந்த மாதிரி மிக்ஸ் பண்ணாம ஸ்டார்ட் டு என்ட் கிரியேடிவ் ஃபிலிம்.

அனிமேஷன் படமாக கோச்சடையானை எடுக்க என்ன காரணம்?
FILE

அனிமேஷன்தான் என்னுடைய முதல் காதல். என்னுடைய மேரேஜுக்கு முன்பே கோச்சடையான் மாதிரி ஒரு படம் பண்ணணும்ங்கிற எண்ணம் இருந்தது. திருமணத்துக்குப் பிறகு என்னோட கணவரும் மற்றவர்களும் என்னோட ட்ரீமை நனவாக்க உதவி பண்ணுனாங்க.

ஜப்பான் மொழி சப்டைட்டிலோடு இது ஜப்பானில் திரையிடப்படுமா?

நிச்சயமாக. அப்பாவுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் ஜப்பானில் இருக்காங்க. இன்னொரு அட்வான்டேஜ் என்னன்னா நம்ம ஊர்ல அனிமேஷன்ங்கிற டெக்னாலஜி புதுசு. ஜப்பான்லயும் மற்ற வெளிநாடுகளிலும் அது ரொம்ப பிரபலம். அதிலும் முக்கியமாக ஜப்பான்ல அனிமேஷன் புரியும். இது எந்த மாதிரி மீடியம், அனிமேஷன் படம்னா நாம என்ன எதிர்பார்த்து போலாம் உல்லாமே தெரியும். ஸோ அவங்களுக்கு இது எக்ஸையிட்டிங் படமா இருக்கும். ஏன்னா அவங்களோட டான்சிங் மகாராஜா - அப்பாவை ஜப்பான்ல டான்சிங் மகாராஜான்னு கூப்பிடுவாங்க. அவங்களுக்கு தங்களோட டான்சிங் மகாராஜாவை கோச்சடையானில் பார்க்கிறது ஆச்சரியம் தரக் கூடியதாக இருக்கும்.

ரஜினி ருத்ரதாண்டவம் எல்லாம் ஆடியிருக்கிறாரே?
FILE

அதுதான் இந்த பெர்பாமன்ஸ் கேப்சர். என்ன லைவ்ல பண்ண முடியாதோ அதை இந்த டெக்னாலஜியை வச்சு சாதிக்கலாம். எனக்கு என் அப்பா ருத்ரதாண்டவம் பண்ணி பார்க்கணும்னு ஒரு ஆசை. கோச்சடையானின் அந்த ஜடா முடி, அந்த சிக்ஸ்பேக் எல்லாம் சிவனையே பார்க்கிற மாதிரி இருக்கும். படத்துல அந்த டான்சுக்கு முன்னாடி, ஆதி சிவனே அவதாரம் எடுத்து வந்தது போல் ஆடும் ஆனந்த தாண்டவம்னு ஒரு டயலாக்கும் வரும்.

கோச்சடையான் கதை என்ன?
FILE

கோச்சடையானுக்கு இரண்டு மகன்கள் உண்டு. ஒருவர் ராணா இன்னொருவர் சேனா. கோச்சடையான் அரசுரிமையை சேனாவுக்கு தர்றார். ராணாவுக்கு அவர் என்ன தந்தார்? ராணா ஸ்கிரிப்ட் பண்ணுனப் பிறகுதான் ரவிக்குமார் அங்கிள் கோச்சடையான் கதையை பண்ணுனாங்க. இரண்டு சகோதரர்களுக்கிடையிலான சண்டைதான் ராணா.

எல்லா அப்பாக்களும் மகள்களுக்கு பொம்மை வாங்கித் தருவாங்க. ரஜினி மட்டும்தான் தன் மகளுக்காக பொம்மையாகவே ஆகிட்டார்னு ஒரு கமெண்ட் இணையத்தில் உலவுகிறதே?
FILE

இது அனிமேட்டட் படம்தான். பொம்மைப் படம்ங்கிறது கலோக்கியலா சொல்றது. இந்தப் படத்தைப் பற்றி என்ன விமர்சனம் வந்தாலும் அது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் அதை கன்சிடர் பண்ணுவேன். ஏதாவது தப்பு இருந்தா அதை அடுத்தப் படத்தில் திருத்திப்பேன்.

அப்பாவை இயக்கியது எப்படி இருந்தது?
FILE

அப்பாவை இயக்கியது... நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்னு நினைக்கிறேன். நான் முதல்ல ஆக்சன் சொன்னப்போ அப்பா சிரிச்சிட்டார். நம்ம குழந்தை நம்ம முன்னாடி நின்னு இப்படி ஆக்சன் சொல்லுதேன்னு. ரஜினிகாந்துக்கு மகளா பிறந்ததும், அவரை இயக்கியதும்... நான் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கேன்ங்கிறதுதான்.

லதா ரஜினிகாந்தும் பாடியிருக்கிறார்கள்...?
FILE

அம்மா அமேஸிங் சிங்கர். அம்மா அன்புள்ள ரஜினிகாந்தில் பாடியிருக்காங்க. டிக் டிக் டிக்ல பாடியிருக்காங்க. இப்போ அவங்களுக்கு நேரமில்லை. கிரான்ட் மதர், அம்மா, மனைவி, ஃபவுண்டர்னு நிறைய ரோல்ஸ் அவங்களுக்கு இருக்கு. கம்பெல் பண்ணிதான் பாட வச்சேன். அப்பா அம்மாவோட இப்படி வொர்க் பண்ற பாக்கியம் வேற எத்தனை பேருக்கு இருக்கு.

படத்தின் ரன்னிங் டைம்?

இரண்டு மணி நேரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்