இலங்கையில் ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆளும் கூட்டணி கட்சித் தலைவர் எதிர்ப்பு

செவ்வாய், 21 ஜூன் 2016 (13:34 IST)
நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்பட கூடாதென்று அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவரும், அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
 
கொழும்பில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரணவக்க, தான் பதவிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமென்று கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாக்குறுதியொன்றை வழங்கியதாக தெரிவித்தார்.
 
ஆனால், நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக ஒழிக்கப்பட கூடாதென்று கூறிய அமைச்சர் ரணவக்க, இதன் முலம் நாடு பலவீனமடைய வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தார்.


 
இன்று ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட அரசாங்கத்தை முன் கொண்டு செல்லும் வாய்ப்பு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் காரணமாகவே கிடைத்துள்ளதாக அமைச்சர் ரணவக்க தெரிவித்தார்.
 
எனவே, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால் அதன் முலம் நாட்டில் திறமற்ற தன்மை உருவாகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்