பெண்ணியவாதி சாந்தி சச்சிதானந்தம் மரணம்

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (03:45 IST)
இலங்கையின் பெண்ணியவாதி சாந்தி சச்சிதானந்தம் கொழும்பில் காலமானார்.
 
இலங்கையின் பிரபல அரசியல் விமர்சகர்,  சமூகவியல் ஆய்வாளர், பெண்ணியவாதி என்று போற்றப்பட்டவர் சாந்தி சச்சிதானந்தம்.
 

 
யாழ்ப்பாணத்தில் பிறந்த சாந்தி சச்சிதானந்தம், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டம் பெற்றவர். இவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்ப காலங்களில் பணியாற்றி உள்ளார்.
 
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும், மிகுந்த புலமை பெற்ற இவர், இரண்டு மொழிகளிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
இலங்கையில், விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்த போது, இலங்கை அரசின்  நடவடிக்கைகளை விமர்சனம் செய்து பல கட்டுரைகளை எழுதினார். இதனால் அரசின் கோபப் பார்வைக்கு ஆளாகி பல துன்பங்களை அனுபிவித்தார்.
 
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பிவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  காலமானார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்