ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யோஷிதா ராஜபக்சே ஜாமீனில் விடுதலை
செவ்வாய், 15 மார்ச் 2016 (13:07 IST)
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் 2 ஆவது மகன் யோஷிதா ராஜபக்சே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை கடற்படை அதிகாரியாக பணிபுரிந்தார். இந்நிலையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது யோஷிதா பண மோசடி செய்து ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து கடற்படை பணியில் இருந்து யோஷிதா ராஜபக்சே பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவரது காவலை வருகிற 24 ஆம் தேதிவரை நீடித்து குடுவேலா மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்நந்து, அந்த தீர்ப்பை எதிர்த்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் யோஷிதா ராஜபக்சே மற்றும் 3 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ராஜபக்சே குடும்பத்தினர் மீது தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவாறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.