மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்தது - இலங்கை அதிபர் யோசனை

செவ்வாய், 2 ஜூன் 2015 (19:49 IST)
போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்க மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்தது என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா யோசனை தெரிவித்துள்ளார்.
 

 
இலங்கையில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டு உரையாற்றினார்.
 
அப்போது பேசிய அவர், “இலங்கையில் போதைப் பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்ததாகும் என்று தான் யோசனை ஒன்றை முன்வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், அதற்கான வாதப் பிரதிவாதங்களை நாட்டில் இன்று முதல் ஏற்படுத்துவதற்கான யோசனையை தான் முன்வைப்பதாகவும் அதனூடாக வெளிப்படும் மக்களின் கருத்துகளை கேட்டபின் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்