உலக மல்யுத்த போட்டி: இந்தியா சாதனை – ஒலிம்பிக் போட்டிக்கு ஆள் ரெடி!

சனி, 21 செப்டம்பர் 2019 (12:40 IST)
உலகளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதித்து வரும் இந்தியா தற்போது உலக மல்யுத்த போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தேர்வு பல நாடுகளிலும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் உலக அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற உலகளவிலான மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் பூனியா மற்றும் ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர். பஜ்ரங் பூனியா தங்க பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதியில் அளிக்கப்பட்ட குழப்பமான தீர்ப்பால் வெளியாறினார். எனினும் வெண்கலத்துக்கான பிரிவில் போட்டியிட்டு மங்கோலியா வீரர் துமுர் உசிரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

அதேபோல ரவிக்குமார் நடப்பு ஆசிய சாம்பியனான ஈரான் அட்ரி நாகர்சியை தனது வலிமையால் வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்த இரு வீரர்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த வருட ஒலிம்பிக் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்