மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.
132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்ற்து. பிரண்ட் அபாரமாக விளையாடி 60 ரன்கள் எடுத்தார்.
டாடா ஐபிஎல் முதல் கோப்பையை மும்பை அணி வென்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.