ஆசியக்கோப்பை யாருக்கு? இன்று இந்தியா – இலங்கை பலபரீட்சை!

சனி, 15 அக்டோபர் 2022 (08:44 IST)
பெண்கள் ஆசியக்கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் மோதிக் கொள்ள உள்ளன.

ஆசியக்கோப்பை பெண்கள் கிரிக்கெட்டின் 8வது தொடர் வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 நாட்டு அணிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் லீக் சுற்றின் முடிவில் டாப் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

அதிக புள்ளிகளுடன் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. அதை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளும் அரையிறுதியில் நுழைந்தன. நடப்பு சாம்பியனான வங்க தேசம் லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

ALSO READ: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..தென்கொரியா எல்லையில் பதற்றம்

தற்போது நடந்து முடிந்துள்ள அரையிறுதி சுற்றுகளில் இந்தியா தாய்லாந்தையும், இலங்கை பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்தியா – இலங்கை இடையேனா இன்றைய இறுதி போட்டியில் வென்று ஆசியக்கோப்பையை வெல்லப்போவது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு வங்கதேசம் கோப்பையை வென்ற நிலையில், இந்த முறை கோப்பையை வெல்ல இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் ஆண்கள் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை இலங்கை அணி வென்றது. அதுபோல பெண்கள் ஆசியக்கோப்பையிலும் இலங்கை அணியே வெல்லுமா என்ற கேள்வியும் உள்ளது.

Edited by: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்