சீனாவில் உள்ள பீஜிங் நகரில் உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் உசைன் போல்டின் ஜமைக்கா அணி 37.36 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றது.
போட்டியை நடத்தும் சீனா அணி 2ஆவது இடத்தையும், கனடா அணி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் உசைன் போல்ட் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.