இங்கிலாந்து அணி வெற்றி கடைசி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. ஜோ ரூட் 38 ரன்களுடன் நல்ல பார்மில் இருந்தார். அப்போது பும்ரா முதல் பந்தை வீசினார். அப்போது, பந்து ஜோ ரூட்டின் பேட்டில் பந்து அவருடைய காலுறையில் பட்டது. ஆனால், நடுவர் சம்ஷுதீன் அவுட் என அறிவித்தார். இதனால், அவர் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இந்த தோல்வி குறித்து கூறியுள்ள இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், ”பும்ரா வீசிய கடைசி ஓவரில், பந்து ஜோ ரூட்டின் பேட்டில் பட்டதை கவனிக்காமல், நடுவர் சாம்ஷுதீன் அவுட் கொடுத்தது ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டது.
களநடுவரின் இந்த செயல்பாடு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கிட்டத்தட்ட 40 பந்துகளை சந்திருந்திருந்த ரூட் களத்தில் இருந்திருந்தால் முடிவு வேறுமாதிரியாக மாறியிருக்கக்கூடும். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்த்தால், மிகுந்த விலையை கொடுக்க வேண்டும் என நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.