உலகக்கோப்பையை வெல்வது யார்? இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து பலப்பரிட்சை!

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (09:26 IST)
கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் இன்று நடைபெறவுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் முதல்முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்பதை தெரிந்து கொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
 
சொந்த மண்ணீல் இறுதிப்போட்டி நடைபெறுவதால் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம் உள்ளது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட், ஜேஜே ராய், பெயர்ஸ்டோ, கேப்டன் மோர்கன், மொயின்கான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், வுட், பிளங்கெட், ரஷித் ஆகிய பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்தும் திறமையுள்ளவர்களாக உள்ளனர். எனவே திறமையுடன் அதிர்ஷ்டமும் கைகோர்த்தால் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.
 
அதேபோல் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் உள்ளார். குப்தில், முண்ரோ, நீஷம், டெய்லர், கிராந்தோம் ஆகியோர் ரன்குவிக்கும் மெஷின்களாக உள்ளனர். மேலும் டிரெண்ட் போல்ட், ஃபெர்குயீசன், ஹெண்ட்ரி, ஆகியோர் பந்து வீச்சிலும் அனல் பறக்கின்றது. அரையிறுதியில் இந்தியாவை வென்ற அணி என்பதால் மனரீதியில் நியூசிலாந்து அணி வீரர்களுக்கு ஒரு தைரியமும் உள்ளது. எனவே நியூசிலாந்து அணி, கோப்பையை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.
 
இன்றைய போட்டியின்போது மழை வர வாய்ப்பு இல்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்