ஏற்கனவே அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தோனியும் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் ஓய்வு குறித்து நேற்று அவர் கருத்து தெரிவித்த போது என்னுடைய ஓய்வை அறிவிக்க இது சரியான தருணம் என்றாலும் எல்லா இடங்களிலிருந்தும் எனக்கு அன்பு அளவு கடந்து கிடைத்து வருகிறது
இத்துடன் நான் எளிதாக கிளம்பி விட முடியாது, ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது தான், அது என்னிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அதே நேரத்தில் என்னுடைய உடல் ஒத்துழைக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்