குப்பை அள்ளும் குத்துச்சண்டை வீரர்

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (13:13 IST)
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஒருவர் வறுமையின் காரணமாக தெருவில் குப்பைகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்.
 

 
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் வசிப்பவர் கமல் குமார் வால்மீகி. அவர் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் பகுதி நேர வேலையாக ரிக்‌ஷா ஒட்டிக்கொண்டே குத்துச் சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றவர்.
 
இப்போது தெருவில் குப்பை சேகரிக்கும் வேலை செய்து வரும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் ‘மாவட்ட அளவிலான போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் உத்தரப்பிரதேச மாநில குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளேன்.
 
ஆனால் அந்த வெற்றிகளை பெரிய வாய்ப்பாக மாற்றத் தவறிவிட்டேன். இப்போது நான் ஒரு பயிற்சியாளராக விரும்புகிறேன். என் ஆசைக்கு, என் குடும்பத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தடையாக இருக்கிறது. அதை சாமளிப்பதறகாகவே நான் இந்த வேலையை செய்கிறேன். அரசு நிதி உதவி வழங்ககினால் அது மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்