”நான் தோனியின் தீவிர ரசிகன்” தென் ஆப்பிரிக்க வீரர் நெகிழ்ச்சி

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (11:25 IST)
நான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் தீவிர ரசிகன் என்று தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் லான்ஸ் குலுசுனர் தெரிவித்துள்ளார்.


 
 
தமிழ்நாடு பீரிமியர் லீக் தொடரில் கோவை அணியின் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் குலுசுனர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயிற்சியின் மூலம் கோவை அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ”எனக்கும் எனது கிரிக்கெட் எதிர்காலத்துக்கும் தமிழக பிரிமியர் கிரிக்கெட் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. கிரிக்கெட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் விளையாடுவது சாதரண விஷயமல்ல, இதை இந்திய அணியின் கேப்டன் தோனி மிகச் சிறப்பாக செய்துவருகிறார். இது தவிர, அணிக்கு மிகவும் முக்கியமான பினிஷர் பணியையும் தோனி அருமையாக செய்து வருகிறார். அதன் காரணமாகவே நான் தோனியின் மிகப்பெரிய ரசிகராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்