தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போடியில் 142 ரன்கள் வித்தியாசத்திலும், 3ஆவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ரூசோ 122 ரன்களும், டுமினி 73 ரன்களும் எடுத்தனர்.