தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்கள் நடந்திருப்பதால் அந்நாட்டு அரசு வாரியத்தில் தலையிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக முன்னாள் நிர்வாகி மோரே பதவிக் காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக 500 பக்க அறிக்கை அந்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றுள்ளது. இதில் சில பக்கங்கள் இணையத்திலும் வெளியாகியுள்ளன.