பி எஸ் எல் தொடரில் இருந்து விலகிய ஷாகித் அப்ரிடி!

திங்கள், 14 பிப்ரவரி 2022 (11:18 IST)
ஷாகித் அப்ரிடி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டாலும் பிஎஸ்எல் லீக்கில் மட்டும் விளையாடி வருகிறார்.

பாகிஸ்தான் அணிக்காக 1996 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் பூம் பூம் அப்ரிடி. ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளைக் கூட டி 20 போட்டி போல விளையாடி உலகெங்கும் ரசிகர்களைக் கவர்ந்தவர். பாகிஸ்தான் டி 20 அணிக்கு தலைமையேற்று உலகக்கோப்பையும் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் சர்வ்தேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் மட்டும் இப்போதுவரை விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக முதுகுக் காயத்தால் அவதிப்பட்டு விளையாடி வரும் அவர் இப்போது பி எஸ் எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீண்டும் காயம் சரியானதும் களத்துக்கு வருவேன் எனக் கூறியுள்ள அப்ரிடிக்கு இப்போது வயது 41. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்