பதக்கம் பறிக்கப்பட்டாலும் வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார்: தமிழக வீரருக்கு சேவாக் ஆறுதல்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (08:42 IST)
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தய போட்டியில் 29 நிமிடம் 44:91 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். ஆனால் சில நிமிடங்களில் லட்சுமணன் தனது டிராக்கிலிருந்து மாறி தடத்துக்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்ததாக அறிவிக்கப்பட்டு அவரது பதக்கமும் பறிக்கப்பட்டது.
 
பதக்கத்தை இழந்தபோதிலும் லட்சுமணனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் ஆறுதல்களும் கிடைத்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டுவிட்டரில் லட்சுமணனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
 
"10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சுமணனுக்காக உண்மையாகவே வருந்துகிறேன்.  நான்கு வருட கடினமான முயற்சி எளிதாகக் கடந்துவிட்டது. அவர் நாடு திரும்பும்போது வெற்றி பெற்றவராக  வரவேற்கப்படுவார் என்று நம்புகிறேன்” என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்