சானியா மிர்சா - சோயப் மாலிக் அதிகாரப்பூர்வ விவாகரத்து??

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (11:02 IST)
சானியா மிர்சா - சோயப் மாலிக் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர் என்று தம்பதியரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


சானியா மிர்சா -  சோயப் மாலிக் திருமணத்தில் எல்லாம் சரியாக இல்லை என்று வதந்திகள் பரவி வருகின்றன. சானியாவும் சோயப்பும் விவாகரத்து பற்றி யோசிப்பதாக ஊகங்கள் தெரிவிக்கின்றன. இது அவர்களின் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்போது, ​​சானியா மற்றும் சோயப் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்ததாக தம்பதியரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த தம்பதியின் நெருங்கிய நண்பர், விவாகரத்தை உறுதிசெய்து, ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டனர். அதற்கு மேல் என்னால் எதுவும் தெரிவிக்க முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டென்னிஸ் வீரரும், ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றவருமான சானியா சீசன் முடிவில் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். சானியா மற்றும் ஷோயப் விவாகரத்துக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் தெரியவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஊடகங்கள் சோயப் சானியாவை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளது.

2010 இல் திருமணம் செய்து கொண்ட சானியா மற்றும் சோயப் இருவருக்கும் 2018 இல் இசான் என்ற மகன் பிறந்தான். சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா ஆகிய இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் குழந்தையை சந்திக்க மட்டுமே அவர்கள் இருவரும் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்